
தமிழ் சினிமா முதல் பெண் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த ஃபிப்ரவரி மாதம் இவர் காலமானார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
இதில் ஜான்வி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார்.
இந்நிலையில் அவர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை ஆவண படமாக எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஸ்ரீதேவியாக நடிக்க பிரபல நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.






