
ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணனின் மனைவி எஸ்.கலாவதி சத்யநாராயணன் அவர்கள் தனது 72வது வயதில் காலமானார். இந்தச் செய்தியால் நடிகர் ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரஜினிகாந்த் அண்ணி மறைவு:
இதனை ரஜினிகாந்த் தரப்பில் அவரது மக்கள் தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
. நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாரயணன் அவர்களின் துணைவியார் S .கலாவதி சத்யநாராயணன் (வயது 72) அவர்கள் நேற்று இரவு 11மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். இவரது ஆத்ம ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .#RIPpic.twitter.com/rQTKHVGZ8S— RIAZ K AHMED (@RIAZtheboss) 3 September 2018
ரஜினி சிறுவயதில் இருக்கும்போதே அவரின் பெற்றோர் இறந்துவிட்டனர். அதன் பின்பு ரஜினியை தனது மகன் போலவே அன்பும் அக்கறையும் கொண்டு வளர்த்தவர் கலாவதி. இவரின் மறைவு செய்தியை கேட்டவுடன், உடனடியாக பெங்களூரூவுக்கு புறப்பட்டார் ரஜினி






